தமிழ்நாடு

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள்

4th Jul 2019 02:26 AM

ADVERTISEMENT


தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி இந்தியா) ஆதரவில் 22-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் வரும் 5-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் இந்தக் கண்காட்சியை முன்னிட்டு தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரைப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
நிகழாண்டு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, பள்ளி மாணவர்களிடம் இருந்து, காந்தி வழியில் சுய கட்டுப்பாடே வாழ்வின் அடிப்படை, தனி மனித ஒழுக்கத்துக்கு மகாத்மா காந்தியின் வாழ்வியல் நெறிகள், தூய்மை பாரதம் - நமது இலக்கு ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களிடம் இருந்து, பெண்களுக்கு அதிகாரமளித்தல் நாட்டை முன்னேற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நமது பங்களிப்பு, காந்தியின் வாழ்வியல் நெறியில் தனி மனித  ஒழுக்கத்துக்கு சுய கட்டுப்பாடு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்பட்டன.
சென்னை, கரூர், சேலம், திருச்சி, மதுரை, கோவை, திண்டுக்கல், வேதாரண்யம், ஈரோடு, ராமேசுவரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்தும் அதிகளவில் கட்டுரைகள் வரப்பெற்றன. இந்தப் போட்டிகளுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள்: முதல் பரிசு (ரூ.2,000) மயிலாடுதுறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் சு.கலைவேந்தன், 2-ஆம் பரிசு (ரூ.1,500) பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி ஜி.ஆனந்தி, 3-ஆம் பரிசு (1,000) விருத்தாசலம் வி.இ.டி. மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி பா.சுவேதா ஆகியோர் பெறுகின்றனர்.
கல்லூரி அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள்: முதல் பரிசு (ரூ.2,000) கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர் (பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இணைபவர்) கு.சுனில் பிரசாத், 2-ஆம் பரிசு (ரூ.1,500) மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரி மாணவி எம்.நீலா, 3-ஆம் பரிசு (ரூ.1,000) சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவி 
ஜெ.கோகிலா ஆகியோர் பெறுகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT