தமிழ்நாடு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு

4th Jul 2019 02:25 AM

ADVERTISEMENT


சிகாகோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் 20 பேர் கலந்து கொள்ள ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:-
சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும்  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழக அரசு சார்பிலும், அரசு சார்பற்ற முறையில் தமிழறிஞர்களுமாக மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர். 
அவர்களில் அமைச்சர் க.பாண்டியராஜன் உள்பட அலுவல் சார் உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பி வர ரூ.31.62 லட்சமும், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்க ரூ.28.47 லட்சமும் என மொத்தம் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT