தமிழ்நாடு

முதல்வரைச் சந்தித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏ: மேலும் ஒரு டிடிவி விக்கெட் 'அவுட்'! 

2nd Jul 2019 05:23 PM

ADVERTISEMENT

 

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி செவ்வாய் மாலை முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரத்தினசபாபதி. அதிமுக - அமமுக இடையேயான பிரச்சினையில் இவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற 22 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து இதுவரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் முகாம் மாறத் துவங்கினர்.

ADVERTISEMENT

முதல்கட்டமாக தங்க தமிழ்செல்வன் நேற்று முன்தினம் திமுகவில் சேர்ந்தார். செவ்வாயன்று  காலை தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவரும்,  அமமுக அமைப்புச் செயலாளராக இருந்தவருமான இசக்கி சுப்பையா வரும் 6-ஆம் தேதி அதிமுஅக்கவில் சேரப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி செவ்வாய் மாலை முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இதையடுத்து அவர் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலையும் சந்தித்தார்.  

டிடிவி தினகரனுக்குஆதரவாக  செயல்பட்டதன் காரணமாக, அதிமுக கொறடா ராஜேந்திரன் வேண்டுகோளின்படி கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பட்ட  மூன்று அதிமுக எம்எல்ஏகளில்  ரத்தினசபாபதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

ADVERTISEMENT
ADVERTISEMENT