தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகத்தில் காப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் மின்சார வாரியத்தில் கோளாறுகளை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் காப்பர் தட்டுப்பாட்டைப் போக்க மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றும், சென்னையில் தற்போது இரவு நேரங்களில் மின் அழுத்தம் குறைவாக உள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மின் தேவை 3,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும். கஜா புயல் பாதிப்பால் தட்கல் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மின் இணைப்பு வழங்க முடியவில்லை என்று தங்கமணி தெரிவித்தார்.