ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம்: அமைச்சர் உதயகுமார்

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்றாலும், அலங்காநல்லூரில் நடைபெறும்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம்: அமைச்சர் உதயகுமார்


மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்றாலும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாக உள்ளது. அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வியாழக்கிழமை (ஜனவரி 17) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 காளைகளும், 849 காளையர்களும் களத்தில் உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்ற ஆண்டு போராட்டத்திற்கு பின் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக கல்வெட்டு அமைக்கப்படும். நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இதுகுறித்து முதல்வருக்கும் பரிந்துரை செய்யப்படும். ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com