சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஜன.19-இல் மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

DIN | Published: 17th January 2019 01:27 AM


பாஜகவுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் ஜனவரி 19-ஆம் தேதி பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக நடைபெறும் அனைத்துக் கூட்டங்களிலும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அந்த அடிப்படையில் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
 

More from the section

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு
திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு 
சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துவிட்டார் ராமதாஸ்: கே.எஸ்.அழகிரி சாடல்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீட்கும் வரை சந்தேகம் உங்கள் மீதே: மு.க.ஸ்டாலின் 
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து: ஸ்டாலின் உறுதி