வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்கள்: டிஜிபி உத்தரவு

DIN | Published: 17th January 2019 02:42 AM


தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்- அப்) குழுக்களை உருவாக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக காவல்நிலையங்களுக்கு அவர் புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக் குழுக்களின் அட்மின் ஆக அந்தந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம். 
அதில் காவல் நிலையங்களின் வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் போலீஸாரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் நடவடிக்கை குறித்த சிறு குறிப்புடன் பதிவிடலாம். 
காவல்நிலையங்களில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள், அவற்றின் அட்மின், குழுவில் உள்ள போலீஸார் ஆகியவை குறித்த விவரங்களை ற்ய்க்ஞ்ல்ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப்ழ்ர்ர்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை (ஜன.18) காலை 10 மணிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
 

More from the section

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது
கொடநாடு வழக்கு விவகாரம்: சயன், மனோஜை கைது செய்ய தடை