திருவான்மியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்  முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம். உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஹெச்.வசந்தகுமார், விஜயதரணி, கராத்தே தியாகராஜன்
 திருவான்மியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்  முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம். உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஹெச்.வசந்தகுமார், விஜயதரணி, கராத்தே தியாகராஜன்

அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ப. சிதம்பரம்

அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் .


அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் .
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி  சார்பில் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பங்கேற்ற அவர் மேலும்  பேசியது:
பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று  கூறினார். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விவசாயிகளின் வருமானம் இருமடங்கு உயர்த்தப்படும் என்றெல்லாம் கூறினார். ஆனால், இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் சொல்லாமல் நிறைவேற்றியது எனப்பார்த்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும்,  சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வந்ததும் ஆகும். இந்த நடவடிக்கைகளால் சிறுகுறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.   தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் முடங்கிப்போய்விட்டன. 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இப்படியெல்லாம் இருக்கும்போது 7.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நாடு அடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். இது என்ன தந்திரம் எனத் தெரியவில்லை. பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் 10 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய்விட்டது.பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பலம்.  அதைச் சிதைக்கும் எண்ணத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது.  பிரித்தாளும் முறையைப் பாஜக கையாளுகிறது. இதற்கு அதிமுக துணை போகிறது. அதிமுகவின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை அன்புமணி ஆளுநரிடம் வழங்கினார். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று ராமதாஸ் கூறினார். இப்போது அவர்கள் யாரோடு கூட்டணி அமைத்திருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.திராவிடக் கொள்கையை அதிமுக மறந்துவிட்டது. இது திராவிட இயக்கங்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். சமூக நீதி காப்போம் என்று சொல்லிக்கொள்ளும் பாமகவும் அந்தக் கூட்டணிக்குச் சென்றிருப்பது சரியானது அல்ல. தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு அதிமுக, பாமகவும் துணை நிற்கின்றன. இந்தக் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.க்கள். வசந்தகுமார், விஜயதரணி, மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com