ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வழிபாடு

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி அம்மனை புதன்கிழமை வழிபட்டனர்.
குண்டம்   இறங்கும் பக்தர்கள்.
குண்டம்   இறங்கும் பக்தர்கள்.


ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி அம்மனை புதன்கிழமை வழிபட்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் பக்தர்கள்வருகின்றனர். மாசாணியம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.                                                           
 இந்த ஆண்டு குண்டம்  திருவிழாவையொட்டி தை அமாவாசையான கடந்த  4ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.
 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (பிப்ரவரி 17) மயான பூஜையும், 18ஆம் தேதி சக்தி கும்பஸ்தாபனமும், மகாபூஜையும் நடைபெற்றன. 19ஆம் தேதி குண்டம் கட்டும் முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். சித்திரை தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு குண்டத்தில் பூ வளர்த்தல் நடைபெற்றது. 
  விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் புதன்கிழமை காலை குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.  முன்னதாக, பக்தர்கள் ஆழியாற்றில் புனித நீராடிவிட்டு அருளாளிகளிடம் குண்டம் இறங்க உத்தரவு பெற்றனர். குண்டத்துக்கு முன்பு மாசாணியம்மன் தேர் நிலை நிறுத்தப்பட்டிருந்தது.  இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் குண்டம் இறங்கும் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். குண்டம் இறங்கும் இடத்தில் பக்தர்கள் காத்திருந்தபோது மேலே கருடன் வட்டமிட்டது. அதற்குப் பிறகு அருளாளிகள் முதலில் எலுமிச்சைக் கனி, பூப் பந்தை குண்டத்தில் உருட்டி விட்டனர். எலுமிச்சைக் கனியும், பூப் பந்தும் வாடாமல் இருந்தன. இதையடுத்து அருளாளிகள் முதலில் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கையால் பூ அள்ளி வழங்கினர்.
   இந்நிகழ்வில், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு,  அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கார்த்திக்அப்புசாமி, சுந்தரம், ஆனைமலை அதிமுக நிர்வாகி ராஜேந்திரன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com