தேர்தல் பணிகளை கவனிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்:  தலைமைத் தேர்தல் அதிகாரி

தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கவும், கவனிக்கவும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 
தேர்தல் பணிகளை கவனிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம்:  தலைமைத் தேர்தல் அதிகாரி


தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கவும், கவனிக்கவும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 
 இதுகுறித்து, அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக ஏற்கெனவே கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி,  ராஜாராமன் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக பிரதீப் ஜேக்கப்,  மணிகண்டன் ஆகியோர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்துள்ளது.  இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் தொடர்பான விவரங்களை தமிழக அரசிடம் இருந்து பெற்று,  வரும் 22-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைப்போம். 
தேர்தலை அமைதியான முறையில், நேர்மையாகவும் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்யவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வர உள்ளார். அப்போது , தலைமைச் செயலாளர்,  டிஜிபி,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவார். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாகவும், தேர்தல் அலுவலர்களிடமும் அதற்கான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வரும் 23, 24-இல் சிறப்பு முகாம்
சென்னையில் 14 ஆயிரத்து 221 விண்ணப்பங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 931 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மக்களவைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் வரை வாய்ப்பு அளிக்கப்படும்.
வாக்களிக்கும் தகுதியை பெற, வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பித்திருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரும் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com