திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. 
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. 

மத்தியில் உள்ள பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க அண்மையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தது. 

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆ.ராசா, சிவா, பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் பற்றி மு.க. ஸ்டாலின் ஆலோசித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com