சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதனை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அல்ட்ரா பேஸ்காரியாக்கம் முறையில் கொதிக்க வைக்கப்படும் ஆவின் பால் 6 மாதம் வரை கெடாது.
டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பால் கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.