அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை திருநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளமான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது வரவேற்கத்தக்கது. இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கை என காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 

தமிழக மக்களுக்கான நலனை பெற அதிமுக மத்தியில் ஆளும் பாஜகவுடன் நல்லுறவுடன் உள்ளது. அரசியல் சார்ந்த உறவு யாருடன் வைக்க வேண்டும் என்பதை மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பர். 

தமிழக மக்களுக்கு யார் நன்மை செய்தாலும் அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com