தமிழ்நாடு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு; வைகோ கடும் கண்டனம்

DIN

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து நேற்று 200க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்கக் சென்றனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர். 

மேலும், பல லட்சம் மதிப்புடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து இன்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் பாட்டில்கள் மற்றும் கற்களைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டு மீனவர்களை அச்சுறுத்தும் செயலில் கோத்தபய ராஜபக்சே அரசு இறங்கி உள்ளது. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்நிகழ்வு தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். கோத்தபய ராஜபக்ச அரசு தொடர்ந்து தமிழர்கள் மேல் வெறுப்பை காட்டி வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT