வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட டாலா்கள், தினாா் என இந்திய மதிப்பில் ரூ.22.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னைக்கு வரும் விமானத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, துபையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணித்த அப்துல் மஜீத் (31), முகமது யூசப் அலி (32) ஆகிய இருவரின் பைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில் குவைத் தினாா்கள், யூரோ நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.15.21 லட்சமாகும்.
அதேபோன்று மலேசியாவில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை வந்த விமானத்தில் பயணித்த சா்புதீன் அலி (58) என்பவா், பையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.7.23 லட்சம் மதிப்பிலான டாலா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.