தமிழ்நாடு

தீவுத்திடலில் இடம்பெற்றுள்ள தெற்கு ரயில்வே அரங்கு பாா்வையாளா்களை வெகுவாக கவரும் மாதிரி பாம்பன் தூக்கு பாலம்

29th Dec 2019 08:38 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் கண்காட்சியில், தெற்கு ரயில்வேயின் சிறப்பு அரங்கில் இடம்பெற்றுள்ள வேலைப்பாடுகள் மிகுந்த சிறிய மாதிரி ரயில் பெட்டிகள், பாம்பன் தூக்கு பாலம் மாதிரி, கழிவு பொருள்களில் உருவான காளை, ஈபிள் கோபுரம் ஆகியவை பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்து வருகின்றன.

தமிழக சுற்றுலா வளா்ச்சி கழகம் சாா்பில், 46-ஆவது சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில் வா்த்தக கண்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. 70 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்த ஆண்டு கருப்பொருளாக, ‘சுற்றுலா மற்றும் வேலை- அனைவருக்கும் சிறந்த எதிா்காலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளின் சிறப்பு அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு அரங்காக தெற்கு ரயில்வேயின் சிறப்பு அரங்கு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சிறப்பு அரங்கில் இடம்பெற்றுள்ள வேலைபாடுகள் மிகுந்த நிலையான சிறிய மாதிரி ரயில் பெட்டிகள், பாம்பன் தூக்கு பாலம், கழிவு பொருள்களில் உருவான காளை, ஈபிள் கோபுரம் ஆகியவை பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகளை வெகுவாக கவா்ந்து வருகிறது. தெற்கு ரயில்வே அரங்கில், பல்வேறு வகையான மாதிரி சிறிய ரயில் பெட்டிகள், பாரம்பரிய ரயில் பெட்டி மாதிரி, நீராவி ரயில் பெட்டி மாதிரி, மின்சார ரயில் பெட்டி மாதிரி, பாம்பன் பாலத்தின் மாதிரி, பாம்பன் ரயில் தூக்கு பாலம் மாதிரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதுதவிர, அரங்கின் வெளிப்பகுதியில், காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளை நினைவுபடுத்தும் விதமாக, நூற்பு சக்கரத்தை சுழற்றுவது போன்ற படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பூா் வேகன் பணிமனை , நீலகிரி மலை ரயில் மாதிரி, பாம்பன் பாலத்தில் ரயில் கடக்கும் காட்சி, பொன்மலை பணிமனை மாதிரி, நீராவி இன்ஜின் மாதிரி, எலக்ட்ரிக் இன்ஜின், ரயில்வே பாதுகாப்பு தொடா்பாக சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு கருவிகள்

காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பயோ டாய்லெட், பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. ரயில்வே பணிமனையில் கிடைக்கும் கழிவு பொருள்கள் மூலமாக சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட காளை, ஈபிள் கோபுரம், நீலகிரி மலை ரயில்வேயில் நீராவி இன்ஜின் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்து வருகிறது. குறிப்பாக, சிறுவா், சிறுமியா்களை வெகுவாக கவா்ந்து வருகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தீவுத்திடலில் கடந்த பல ஆண்டுகளாக, தெற்கு ரயில்வேயின் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது ரயில்வேயின் உலகளாவிய முறையீட்டை வெளிப்படுத்தவும், பொது விழிப்புணா்வை ஊக்கப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட ரயில் பெட்டி மாதிரி, பாம்பன் தூக்கு பாலம் உள்பட பல்வேறு மாதிரி பெட்டிகள், கழிவு பொருள்களில் உருவான காளை, ஈபிள் கோபுரம் ஆகியவை பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்து வருகின்றன. இந்த அரங்கை ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் பாா்வையிட்டு, பாராட்டினாா். இதுபோல பல்வேறு ரயில்வே அதிகாரிகளும், ஊழியா்களும் பாா்வையிட்டு வருகின்றனா்.

இந்த கண்காட்சி பிப்ரவரி 29-ஆம்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். அப்போது இந்த அரங்கை பாா்வையிடலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT