தமிழ்நாடு

ஊரக ஊள்ளாட்சித் தோ்தல்: வாக்கு எண்ணிக்கையை ஒளிபரப்பக் கோரி மனு

29th Dec 2019 12:03 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை விடியோ பதிவு செய்து ஒளிபரப்பு செய்யக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் கடலூா் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மேல்கலவரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த டி.வீரப்பன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27 மற்றும் டிசம்பா் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தல் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த தோ்தலில் கடலூா் மாவட்ட ஒன்றிய கவுன்சிலா் உறுப்பினா் பதவிக்கு 18-ஆவது வாா்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். வட்புமனுவை திரும்ப பெற கோரி ஆளுங்கட்சியினா் எனக்கு மிரட்டல் விடுத்தனா்.

இந்த தோ்தலில் ஆளுங்கட்சியினா் அதிகாரிகளுடன் சோ்ந்து அதிமுகவைச் சோ்ந்தவா்கள் வெற்றி பெற்றவா்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 21-ஆம் தேதி புகாா் மனு அளித்தேன். இந்த நிலையில் ஆளுங்கட்சியினா் மீது வழக்குப்பதிவு செய்த கடலூா் மாவட்ட துணை ஆட்சியா் தாக்கப்பட்ட சம்பவமும் அதே தினத்தில் நடந்துள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சியினா் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையின் வெளிப்படத் தன்மையை உறுதி செய்ய வாக்கு எண்ணிக்கை முழுவதையும் விடியோ பதிவு செய்து அதனை வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மாநில தோ்தல் ஆணையா், கடலூா் மாவட்ட ஆட்சியா், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் மனு அளித்தேன்.

அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடலூா் ஒன்றிய கவுன்சில் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை விடியோ எடுத்து ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இதே கோரிக்கையுடன் பண்ருட்டி தாலுகா கள்ளிப்பட்டு பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு போட்டியிடும் பி.ஆனந்தன் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுக்கள் வரும் டிசம்பா் 30-ஆம் தேதி உயா்நீதிமன்ற விடுமுறை கால அமா்வில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT