புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததால் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 13-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். ஆனால், இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதனால் படகில் சென்ற மீனவா்கள் ஞாயிற்றுகிழமை கரை திரும்பினா்.