தமிழ்நாடு

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது

27th Dec 2019 01:54 PM

ADVERTISEMENT

 

சாத்தூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(20) மனநலம் பாதிக்கப்பட்டவர். வியாழக்கிழமை மாலை மகேஸ்வரி, அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திர ராஜன்(40) என்பவர் குடிபோதையில் மகேஸ்வரியை கடத்தி சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பார்த்து சமுத்திர ராஜனை தாக்கியுள்ளனர். பின்னர் ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து சமுத்திர ராஜனை ஏழாயிரம்பண்ணை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சமுத்திர ராஜனை கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை சமுத்திர ராஜனை போலீஸ் விடுத்ததாக தகவல் தெரிந்தது அடுத்து மகேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் ரெட்டியாபட்டி கிராமத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சமுத்திரராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை காட்டிய பின்னரே மகேஸ்வரியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

வாக்குபதிவு மையத்தின் அருகே கிராமத்தினர் கூடியதால் இப்பகுதியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தினர் கலைந்து சென்றதும் வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : woman abuse
ADVERTISEMENT
ADVERTISEMENT