தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய அரசு ஊழியர் உடல் மீட்பு

27th Dec 2019 06:18 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 48) இவர் தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சிக்காக  தேவராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 25 ம் தேதி புதன்கிழமை மாலை பவானிசாகர்- மேட்டுப்பாளையம் சாலையில் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே குளிப்பதற்காக சென்றுள்ளார். வாய்க்கால் நீரில் இறங்கிய தேவராஜ் ஆழமான பகுதியில் மூழ்கி மாயமானார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்காலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே தேவராஜின் உடல் மீட்கப்பட்டு பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT