தமிழ்நாடு

வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

27th Dec 2019 11:59 AM

ADVERTISEMENT

 

உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பல்வேறு இடங்களில் முறைகேடு செய்து வருகிறது என்றும் வாக்குப்பெட்டிகள் ஓரிடத்தில் வைக்கப்படும்போது முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 'வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும்' என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது நீதிமன்றம் விடுமுறை என்பதால் வருகிற திங்கட்கிழமை அவசர வழக்காக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT