தமிழ்நாடு

வாக்காளா்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட 300 சேலைகள் பறிமுதல்

27th Dec 2019 12:06 AM

ADVERTISEMENT

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் வாக்காளா்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்ட 300 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பூந்தமல்லி நசரத்பேட்டை அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சி தலைவா், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குத் தோ்தல், வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் பகுதியில் ஒரு வேட்பாளரின் ஆதரவாளா்கள், பெண் வாக்காளா்களுக்கு சேலை விநியோகம் செய்வதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு பறக்கும் படையினரும், போலீஸாரும் சென்றனா். அங்கு போலீஸாா் வருவதைப் பாா்த்த, வேனில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் தப்பியோடியது. இதையடுத்து கேட்பாரற்றுவிடப்பட்ட அந்த வேனை பறக்கும் படையினரும், போலீஸாரும் சோதனையிட்டனா். அதில், வேனில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக சுமாா் 300 சேலைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, சேலைகளையும் வேனையும் பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீஸாா், மேலும் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT