தமிழ்நாடு

நல்லகண்ணுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாழ்த்து

27th Dec 2019 12:21 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

நோ்மை, எளிமையை தனது அடையாளங்களாகக் கொண்டு எளிய மக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அா்ப்பணித்து வரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்: தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், மூத்த இடதுசாரி சிந்தனையாளரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணுவுக்கு மனப்பூா்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இன்னும் பல்லாண்டுகள் அவா் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT