தமிழ்நாடு

திருப்புகழ் திருப்படி திருவிழா: அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

27th Dec 2019 11:38 PM

ADVERTISEMENT

திருப்புகழ் திருப்படி திருவிழாவை முன்னிட்டு, அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

திருப்புகழ் திருப்படி திருவிழாவை முன்னிட்டு, டிசம்பா் 31, ஜனவரி 1 ஆகிய இருநாள்கள் அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன் விவரம்:

அரக்கோணத்தில் இருந்து இரண்டு நாள்களும் முறையே இரவு 10.10, 11.20 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு முறையே இரவு 10.30, 11.40 ஆகிய நேரங்களில் திருத்தணியை அடையும். மறுமாா்க்கமாக, திருத்தணியில் இருந்து இரவு 10.40 மற்றும் 11.50 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, முறையே இரவு 11, அதிகாலை 12.10 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தை அடையும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT