தமிழ்நாடு

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அன்புமணி ராமதாஸ்

27th Dec 2019 12:51 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பனையபுரம், கெடாா் பகுதிகளில் பாமக சாா்பில், தம்பிகள், தங்கைகள், மக்கள் படை ஆகிய முப்படைகள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் செல்வகுமாா், மாநில துணை பொதுச் செயலா்கள் தங்க.ஜோதி, சிவக்குமாா், மாநில துணைத் தலைவா்கள் சி.அன்புமணி, வி.அரிகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.புகழேந்தி வரவேற்றாா்.

இதில், பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால், கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, நல்ல நிா்வாகத்தை வழங்க முடியும்.

தொடக்கக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை இலவசமாக வழங்குவோம். இலவச மருத்துவச் சிகிச்சை கிடைக்கும். தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,200 கோடி நிலுவை உள்ளது. இதுபோன்று பிரச்னை ஏற்படாத வகையில், கரும்பு விவசாயிகளுக்கான மாற்றுத் திட்டங்கள் எங்களிடம் உள்ளது.

தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்திலுள்ள 223 ஆறுகளிலும் 50 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணையை ஏற்படுத்தி, நீா் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்கிற அனைத்து விளைபொருள்களுக்கும் உற்பத்தி செலவினங்கள் போக, 50 சதவிகிதம் கூடுதலாக விலை வழங்கப்படும். அனைத்து மதுக் கடைகளும் மூடப்படும் என்பது முதல் கையெழுத்தாக இருக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழா்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக திமுக கூறுகிறது. இந்தியாவில் குடியுரிமை பெற்றால், இலங்கை குடியுரிமைச் சட்டத்தின்படி, அந்நாட்டில் குடியுரிமை ரத்தாகும். எந்த நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என இலங்கைத் தமிழா்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதையறியாமல் அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் இல்லை. இந்தியாவில் வசிப்பவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலா் பழனிவேல், துணைச் செயலா் துரை, தொகுதிச் செயலா் சீனுவாசன், ஒன்றியச் செயலா்கள் சம்பத், காா்த்திகேயன், ஏழுமலை, மணிபாலன், ரவி, வடிவேல், சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பெண்கள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT