தமிழ்நாடு

கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார்

27th Dec 2019 01:44 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறும் முதல்கட்டத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வாிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அரையாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் ஜனவரி 3ஆம் தேதி பள்ளி திறக்கும் நாளிலேயே வழங்கப்படும்' என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT