ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் நிலவரம் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்பிட இரண்டு கட்டமாக நேரடித் தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி முதல் கட்டத் தோ்தலானது 45 ஆயிரத்து 336 பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவா்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 10.4 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 24.08 சதவீத வாக்குகளும் மாலை 3 மணி நிலவரப்படி 57.5 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
• மதுரையில் 9 மணி நிலவரப்படி 7.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
• ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.25 சத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
• திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் காலை 9 மணி நிலவரப்படி 16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
• தேனி மாவட்டத்தின் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
• கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 476 வாக்குசாவடி மையங்களில் காலை 9 மணி நிலவரப்படி 9.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
• திருப்பூர் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.
• சேலம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 12 ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது 9 மணி நிலவரப்படி 12.03% பதிவாகியுள்ளது.
___________________________________
• புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 ஒன்றியங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் காலை 10 மணி வரை 20% வாக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
* காலை 10 மணி நிலவரப்படி கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 11 சதவீத வாக்குப்பதிவு.
____________________________________
* மதுரை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 26.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
-------------------------------------------------
* குமரி மாவட்டத்தில் பகல் 1. மணி வரை 38.91 சதவீத வாக்குகள் பதிவாகின
* விருதுநகர் மாவட்டத்தில் நண்பகல் 1 வரை 44 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
* புதுக்கோட்டை மாவட்டத்தில் பகல் ஒரு மணி நிலவரப்படி 47.39 சதவீத வாக்குகள் பதிவாகின.
• தேனி மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரம் 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
• தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 மணி வரை 39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
• திருச்சி மாவட்டத்தில்
மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
• திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மணி நிலவரப்படி 43.24 சதவீத வாக்குகள் பதிவாகின.
• ஈரோடு மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 43.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
• மதுரை மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 45.9 சதவீத வாக்குகள் பதிவாகின.
• ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நண்பகல் 1மணி நிலவரப்படி 39.80 சதவீத வாக்குகள் பதிவானது.
--------------------------------------------------------------
• தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
• தேனி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி வரை 62 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
• குமரி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி வரை 50.47 சதவீத வாக்குகள் பதிவாகின.
• புதுக்கோட்டை மாவட்டத்தல் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 62.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
• திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி 56.69 சதவீத வாக்குகள் பதிவாகின.
• ஈரோடு மாவட்டத்தில் 3 மணி நிலவரம் 58.89 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.