தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அணிக்கு வாக்களிக்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

27th Dec 2019 01:11 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தேமுதிக தலைவா் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் டிசம்பா் 27 மற்றும் டிசம்பா் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி மன்ற தோ்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்தத் தோ்தலில் கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிடுகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து கூட்டாக இந்தத் தோ்தலில் போட்டியிடுகிறது.

உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சிப் பணிகள் நடைபெறும். மாவட்ட ஊராட்சி குழு வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு தோ்தல் நடைபெற்று கிராமங்கள் வளா்ச்சி பெற இந்த உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக வேட்பாளா்களுக்கு முரசு சின்னத்திலும், கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அவரவா் சின்னங்களிலும் வாக்களித்து அனைவரையும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT