தமிழ்நாடு

கோவை: சூரிய கிரகணத்தைக் காண ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சிறப்பு ஏற்பாடு

26th Dec 2019 10:32 AM

ADVERTISEMENT

 

பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இயற்பியல் துறை சார்பாக சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சூரிய கிரகணத்தை மிகக் குறுகிய நேரத்திற்கு கூட நமது கண்களினால் பார்க்கக்கூடாது. சூரியனின் பெரும்பகுதியை சந்திரன் உள்ளடக்கியிருந்தாலும் கண்களுக்கு நிரந்தர சேதத்தையும், பார்வைக் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கிரகணத்தை காணும் விதமாக ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையும்,சென்னை பிரேக்த்ரு சயின்ஸ் சொசைட்டி மற்றும் கோவை ஏ.இ.எஸ் டெக்னாலஜிஸ், ஆகியவை இணைந்து ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய வளாகத்தில் உள்ள வெங்கடகிருஷ்ன உள்விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மும்பை, கேரளா,  சென்னையில் இருந்து அறிவியலாளர்கள், பேராசிரியர்கள் இந்த கிரகணத்தை பற்றி சிறப்பு கருத்தரங்குகள், விளக்கவுரைகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT