தமிழ்நாடு

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் ம.ப. குருசாமி காலமானார்

26th Dec 2019 03:15 PM

ADVERTISEMENT

 

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலர் ம.ப. குருசாமி (84) புதன்கிழமை இரவு காலமானார். 

மூத்த காந்தியவாதியான அவர் நீண்ட காலமாக காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அருங்காட்சியகத்தின் செயலராகப் பொறுப்பேற்றார். 

காந்திய சிந்தனைகளில்  ஆழ்ந்த அனுபவம் பெற்ற அவர், இதுவரை 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை இரவு அவர் காலமானார்.

ADVERTISEMENT

அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல்லில் உள்ள அவருடைய இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT