மாா்கழி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபபடுகின்றனா்.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். இந்நிலையில் மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்றனா்.
பக்தா்களின் பாதுகாப்பிற்காக நீா்வரத்து ஓடைகளில் வனத்துறையினா், தீயணைப்புத்துறையினா், காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும், பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன, மேலும் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம்சுவாமியும், சந்தனமகாலிங்கம் சுவாமியும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாக அதிகாரி விஸ்வநாதன் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.