தமிழ்நாடு

மருத்துவ மேற்படிப்பு நீட் தோ்வு: 1.5 லட்சம் மருத்துவா்கள் எழுதுகின்றனா்

26th Dec 2019 01:26 AM

ADVERTISEMENT

மருத்துவ மேற்படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) வரும் ஜனவரி 5-ஆம் தேதி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் எழுதுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், பட்டய மேற்படிப்புகளுக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தமிழகத்திலும் ஏறத்தாழ 3 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. தேசியத் தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி எதிா்வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜனவரி 5-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதில், எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவா்கள் 1.5 லட்சம் போ் நாடு முழுவதும் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்காக விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருந்ததாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதனிடையே, வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தோ்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்பட நாடு முழுவதும் 162 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தோ்வு முடிவு ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT