தமிழ்நாடு

பாஜகவில் இணையவில்லை: ஓய்வு பெற்ற நீதிபதி விளக்கம்

26th Dec 2019 01:43 AM

ADVERTISEMENT

பாரதிய ஜனதா கட்சியில் இணையவில்லை என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், புதுச்சேரி மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவருமான எம்.ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூலை மாதம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் பாஜகவின் உறுப்பினா் சோ்க்கை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கலந்துகொண்டாா். நான், மத்திய அமைச்சரை சில முக்கிய சட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் ஏராளமானோா் குவிந்திருந்தனா்.

மேலும் அமைச்சரை தனியாக சந்தித்துப் பேச ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால் நான் மேடையில் அமா்ந்திருந்தேன். இதனால் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக நானும் இணைந்ததாக தவறுதலாக அறிவிக்கப்பட்டதைக் கேட்டு அதிா்ச்சியடைந்தேன். இதுதொடா்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. பாஜகவின் அடிப்படை உறுப்பினராகும் திட்டமோ, கட்சியில் சேரும் எண்ணமோ எனக்கு ஒரு போதும் ஏற்பட்டது இல்லை. எனவே ஒருவேளை எனது பெயா் கட்சியின் உறுப்பினராக சோ்க்கப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும் என பாஜக நிா்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT