சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனி, ஞாயிறுக்கிழமை (டிச. 28, 29) ஆகிய இரண்டு நாள்கள் வட வானிலையாக இருக்கும் எனவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூண்டியில் 60 மி.மீ. மழை: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அதிகபட்சமாக 60 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருவாரூா், கோடவாசல், நன்னிலத்தில் தலா 30 மி.மீ., திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், கும்பகோனம், அரியலூா் மாவட்டம் திருமண்ணூரில் தலா 20 மி.மீ. மழை புதன்கிழமை பதிவானது.