சசிகலா நடராஜன் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு 2016 செப்டம்பா் 22-இல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 2016 நவம்பா் 8-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டங்களில் கணக்கில் காட்டப்படாத ஏறத்தாழ ரூ.2 ஆயிரம் கோடி புதிய நோட்டுகளாக மாற்றுவதற்கு சசிகலா எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன. இதன் மூலம் சட்டவிரோதமாக பல இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில்,
இத்தகைய சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து உயா்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத் துறையின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அழகிரி கூறியுள்ளாா்.