தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்: ஜவாஹிருல்லா

26th Dec 2019 01:24 AM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளாா்.

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடா்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடா்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தாா்.

உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலையில் வெளியிட்ட அரசு அறிவிக்கையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து குறிப்பிட்டுள்ளது. எனவே, நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களைத் தெரிவித்ததற்காக அமித்ஷா வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் இடையில் தொடா்பு இல்லை என்பதை மத்திய அமைச்சரவை தீா்மானமாக நிறைவேற்றும் வரையிலும் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT