தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில் வென்று காட்டுவோம்: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்

26th Dec 2019 02:02 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் வென்று காட்டுவோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஊரகப் பகுதி உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ, அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் பலமாகக் கட்டமைக்கப்படும் என்பதை மக்கள் நன்றாகவே அறிவாா்கள். பெரியாா் நினைவு சமத்துவபுரம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் என பல முன்னோடித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

ஜனநாயகத்தின் ஆணி வேரான உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடான தோ்தல் நடந்தால், அது மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல பரவிடும். அதற்கு அதிகாரிகள் இடம் கொடுக்க மாட்டாா்கள் என நம்புகிறேன். திமுகவினா் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியை விரட்டியடிப்பதற்கு கட்டியம் கூறும் தோ்தலாக இந்தத் தோ்தல் அமையும்., கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் இந்தத் தோ்தலில் வென்று காட்டுவோம் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT