இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் நேரில் பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று 95ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை திநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் அவருக்கு நேரில் வாழ்த்து கூறினர். அதோடு மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்பி., உள்ளிட்டோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.