புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய நலத்திட்டங்களையும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதிலும் ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் நாராயணசாமி தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இது குறித்து வலியுறுத்தி ஒரு விரிவான மனுவை அளித்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.