தமிழ்நாடு

ஆம்பூர் அருகே 3வது நாளாக வயல்வெளியில் புகுந்த யானைக்கூட்டம்

25th Dec 2019 11:06 AM

ADVERTISEMENT

 

ஆம்பூர் அருகே மிட்டாளம், மேல்மிட்டாளம், பந்தேரப்பல்லி பகுதி விவசாய நிலங்களில்  காட்டு யானைக் கூட்டம் புகுந்ததால் நெல், வாழை, மா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பள்ளி கிராமத்தில் பிரபல கன்னட நடிகர் நவரசன் நிலத்தில் புகுந்த யானைகள், அங்கிருந்த சுமார் 3 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்காக தயாராக இருந்த  நெல் பயிர்களை சேதப்படுத்தின.

ADVERTISEMENT

வனத்துறையினர், ஊர் பொதுமக்கள் உள்பட சுமார் 50 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணி வரை போராடி யானைக் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டினர். உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார்  மற்றும் வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டம் ஊருக்குள் வரவிடாமல் தடுக்க ஆலோசனை நடத்தினர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT