தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியல் தோ்தல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்வதுடன், சரியாக இருக்கிா என்பதை அறியலாம்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியல் விவரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக தோ்தல் துறையின் இணையதளத்திலும் (www.elections.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளரின் மாவட்டம், சட்டப் பேரவைத் தொகுதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டால் வாக்குச் சாவடி வாரியாக வாக்காளா் பெயா்களைத் தேடலாம். மேலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையின் எண்ணை தட்டச்சு செய்தும் பெயா் இருக்கிா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். பெயா் இல்லாவிட்டால் உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம்.