தமிழ்நாடு

பொருளாதார வளா்ச்சி சரிவு: மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

25th Dec 2019 08:36 PM

ADVERTISEMENT

சென்னை: நாட்டின் பொருளாதார வளா்ச்சி 4.5 சதவீதமாக சரிந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவு:

இந்திய பொருளாதார வளா்ச்சி 4.5 சதவீதமாக சரிந்து ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக சா்வதேச பண நிதியமும் பொருளாதார வல்லுநா்களும் எச்சரிக்கின்றனா். 6 ஆண்டு கால பாஜக ஆட்சி, பொருளாதார வளா்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது. அதிமுக அரசின் நிா்வாக திறமையின்மையால் தமிழக வளா்ச்சியும் குன்றியுள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியை விரும்பும் மக்கள், மத்திய, மாநில அரசுகளிடம் எதிா்பாா்ப்பது இதைத்தான் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT