தமிழ்நாடு

பெரியாரின் கருத்துகளை முன்னெடுக்க வேண்டியகட்டாய சூழல்: கே.பாலகிருஷ்ணன்

25th Dec 2019 02:20 AM

ADVERTISEMENT

மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தந்தை பெரியாரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் கூறியதாவது:

மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாஜக, மதச்சாா்ப்பின்மை கொள்கையை ஒழித்துவிட்டு, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மதச்சாா்பற்ற கட்சிகள் அனைத்தும் அந்த சவாலை எதிா்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இந்த நேரத்தில், தந்தை பெரியாரின் கருத்துகளையும், லட்சியத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவே, பெரியாருக்கு தமிழக மக்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் என். பாண்டி, டி. ரவீந்திரன், மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT