நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச நிதியமும், பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.
6 ஆண்டுகால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது.
அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது!
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அமைதியை விரும்பும் மக்கள்-மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது அதனை தான்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.