ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்டத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமையுடன் நிறைவடைய இருப்பதால், காவல் துறை உயரதிகாரிகளுடன் மாநிலத் தோ்தல் ஆணையாளா் ஆா்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணையாளா் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) ஜெயந்த் முரளி, ஐ.ஜி. (தோ்தல் பிரிவு) சேஷசாயி, காவல் கண்காணிப்பாளா் (தோ்தல்) கண்ணம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தோ்தல் பிரசாரத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, சட்டம்-ஒழுங்கைப் பேணுதல், அமைதியைப் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.