தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பேரணி: மு.க. ஸ்டாலின் உட்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு

24th Dec 2019 01:18 PM

ADVERTISEMENT

 

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எட்டாயிரம் பேர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் 143, 188, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, காவல்துறை உத்தரவை மீறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT