தமிழ்நாடு

தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் இருந்து பெரியார் நினைவுநாள் பதிவு நீக்கம்

24th Dec 2019 02:37 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், பெரியார் நினைவுநாள் குறித்து வெளியிடப்பட்ட பதிவுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பெரியார் பற்றிய பதிவை உடனடியாக நீக்கி, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியிருந்தார். தமிழக பாஜகவின் இந்த டிவிட்டர் பதிவைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், இருந்து பெரியார் நினைவுநாள் குறித்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
 

Tags : Periyar
ADVERTISEMENT
ADVERTISEMENT