தமிழ்நாடு

5 ஆண்டுகளில் கடந்த 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சி: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

24th Dec 2019 04:34 PM

ADVERTISEMENT


கோவை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, இந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சித்துறைதான் 99 விருதுகளைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இந்தப் பருவமழைக் காலத்தில் மழை அதிகளவில் பெய்து நீர்நிலைகள் நிரம்பி நல்ல நிலையில் உள்ளது.

மக்களுக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என்றும் கூறினார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT