தமிழ்நாடு

மயிலாடுதுறையில் பிரசாரம் செய்யச் சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு எதிர்ப்பு

24th Dec 2019 11:35 AM

ADVERTISEMENT


மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சென்ற தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகக் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மயிலாடுதுறை அருகே நீடூரில் இன்று உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளச் சென்றிருந்தார்.

ஆனால், மயிலாடுதுறையில் மருத்துவமனை அமைய அமைச்சர் ஓ.எஸ். மணியன் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்து, பொதுமக்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பிரசாரம் மேற்கொள்ள வந்த அமைச்சருக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT