தமிழ்நாடு

போராட்டத்தில் பங்கேற்றதால் ஜெர்மனுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சென்னை ஐஐடி மாணவர்

24th Dec 2019 03:32 PM

ADVERTISEMENT

 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதனால் சென்னை ஐஐடி மாணவர், அவரது சொந்த நாடான ஜெர்மனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐஐடியிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஜாக்கோப் என்பவரும் பங்கேற்றார். 

தொடர்ந்து, அரசு அனுமதி பெறாத போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர் ஜென்மம் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். படிப்பதற்காக விசா பெற்று சென்னை வந்துள்ள நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சென்னை ஐஐடி மாணவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர், 'போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜெர்மன் மாணவர் திருப்பி அனுப்பப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறோம். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக எந்த ஜனநாயகமும் நடந்துகொண்டதில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் இதில் தலையிட்டு, மாணவர் மீண்டும் கல்விபெற உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags : CAA protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT